tamilnadu

img

மாவீரன் பகத்சிங் 112ஆவது பிறந்த தின விழா

நாமக்கல், செப்.28- மாவீரன் பகத்சிங் 112ஆவது பிறந்தநாள் விழா இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பள்ளிபாளையம் ஒன்றியக் குழுவின் சார்பில் எழுச்சி யுடன் கொண்டாடப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்ட நாயகன் மாவீரன் பகத்சிங்கின் பிறந்த  தினம் நாடு முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் ஒன்றியக் குழுவின் சார்பில் ஆவாரங்காடு பகுதியில் ஒன்றிய செயலாளர் எம்.கே. பிரபாகரன், அலமேடு பகுதியில் கிளைச் செயலாளர் ஆர்.கோவிந்த ராஜ், காவேரி ஆர்.எஸ். பகுதியில் ஒன்றியக்குழு உறுப்பினர் பூபாலன் ஆகியோர் தலைமை தாங்கினர்.  இந்த நிகழ்வில் பகத்சிங் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர். ரவி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர். 

;