tamilnadu

img

சீரான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்துக இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தல்

கோவை, ஆக. 5 -  குடிநீர் வடிகால் வாரியமும், கோவை மாநகராட்சி நிர்வாகமும் மாறிமாறி பழிபோடுவதை விடுத்து சீரான குடிநீர் விநியோகத்தை உறுதிப் படுத்த வேண்டும் என  சிபிஎம், சிபிஐ கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

இதுகுறித்து  குடிநீர் வடிகால்  வாரிய பில்லூர் பராமரிப்பு செயற் பொறியாளர் ஜான்சனிடம் இடதுசாரி கட்சிகள் சார்பில் அளித்துள்ள மனு வில் தெரிவித்திருப்பதாவது, சின்னவேடம்பட்டி, வெள்ளக் கிணறு ஆகிய பகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகித்து வந்த நிலை யில், சமீபகாலமாக 10 மற்றும் 12 நாட் களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இது குறித்து விசாரிக்கையில் தேவைக் கேற்ப தண்ணீரை குடிநீர் வடிகால் வாரியம் சப்ளை செய்வதில்லை என மாநகராட்சியும், போதிய பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் விரயமாகிறது என வாரியமும் மாறிமாறி குற்றம் சாட்டிக்கொள்கின்றனர்.

 ஆனால், உண்மையில் உடையாம் பாளையம் மேல்நிலை தொட்டிக்கு தினசரி 4.30 லட்சம் குடிநீரும், சின்ன வேடம்பட்டி மேல்நிலைத்தொட்டிக்கு 6 லட்சமும், நஞ்சேகவுண்டன்புதூரில் 1.80 லட்சம் என அத்திக்கிடவு திட் டம் 1- லிருந்து குடிநீர் விநியோ கம் செய்யப்பட்டு வந்தது. இதேபோல் சுப்பைய நாயக்கண்புதூர் மேல்நிலை தொட்டிக்கு அத்திக்கிடவு 2 ஆவது திட்டம் மூலம் 3 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது இதில் சுமார் 40 முதல் 60 சதவீதம் வரையில் மட்டுமே தண்ணீர் ஏற்றப்படுகிறது என்பது தெரிய வருகிறது

. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர். ஆகவே, உடனடியாக குடிநீர் விநியோக குளறு படிகளை களைந்து சீரான குடிநீர் விநியோகிப்பதை உறுத்திப்படுத்த வேண்டும் என அம்மனுவில் குறிப்பி டப்பட்டுள்ளது. முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சின்னவேடம்பட்டி பகுதி நிர்வாகிகள் சந்திரசேகர், சம்பத், கனகராஜ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஆனந்த், வேலுசாமி உள் ளிட்ட நிர்வாகிகள் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.

அதில், மனுவை பெற்றுகொண்ட குடிநீர் வடி கால் வாரிய அதிகாரி பதினைந்து நாட் களுக்குள் பரிசீலனை செய்து கோரிக் கையை நிறைவேற்றுவது என உறுதி யளித்துள்ளார்.

 

;