கோவை, ஆக. 7 – காஷ்மீர் மாநிலத்திற்கு தனி அந்தஸ்த்து வழங்கும் அரசியல் சட்ட பிரிவை ரத்து செய்ததைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார் பில் கோவையில் புதனன்று கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை சிவானந்தா காலனி பவர்ஹவுஸ் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சி.சிவசாமி தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலப் பொரு ளாளர் எம்.ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி, மாநி லக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த் தினர். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்றவர்கள் காஷ்மீர் மாநி லத்தை இரண்டாக பிரித்ததை கண் டித்தும், சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததை கண்டித்தும் முழக்கங் களை எழுப்பினர். இதில் சிபிஐ சார் பில் மாவட்ட துணை செயலாளர் ஆர்.தேவராஜ், மாவட்ட பொருளா ளர் யு.கே.சுப்பிரமணியம், சி.தங்க வேல், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கருப்பையா, என்.ஜெயபால், கே.மனோகரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.