கோபி, பிப்.25- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலைக் குடிநீர் திட்டத்தையும், இரு கிராமங்களில் புதிதாக கட்டப்பட்ட நிழற்குடைகளையும் சுற்றுச் சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கிவைத்தார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி காந்தி நகரில் ஊராட்சி ஒன்றியக்குழு நிதியி லிருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீர் திட்டத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து கவுந்தப் பாடி பகுதியில் இரண்டு சாலை மேம்பாட்டு பணியையும், கவுந்தப்பாடிபுதூர் மற்றும் வேலம்பாளையம் ஆகிய இரு கிராமங்களில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை தொடங்கி வைத்தார். மேலும், கவுந்தப்பாடி அரசு போக்குவ ரத்து கழக பணிமனையின் முன்பு அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று 75 பெண்க ளுக்கு சேலைகளும், மாற்றுத்திற னாளி ஒருவருக்கு மூன்று சக்கர மிதிவண்டி யும் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நி கழ்வுகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் தொழிற்சங்கத்தி னர் என பலர் கலந்துகொண்டனர்.