tamilnadu

img

அக்வா நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கு

கோவை, ஜூன் 25- அக்வா நிறுவனத்தின் தொழி லாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து கோவை துடியலூரில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் செவ்வாயன்று நடை பெற்றது.  கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அக்வா நிறுவனத்தின் கிளை இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி யான உரிமைகள் தொடர்ந்து நிர்வாகத்தால் மறுக்கப்பட்டு வரு கிறது. இதற்கெதிராக சிஐடியு தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது. இதுகுறித்து நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய அந்நிறுவ னத்தின் தொழிலாளியும், சிஐடியு ஊழியருமான தேவராஜ் என்ப வர் எவ்வித காரணமுமின்றி திடீ ரென பணி நீக்கம் செய்யப்பட் டார். இதுகுறித்து சிஐடியு தொழிற் சங்கம் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும், அக்வா நிர் வாகம் பிடிவாத போக்குடன் செயல்பட்டது.  இதனையடுத்து சிஐடியு மாவட்டக்குழுவின் முடிவின்படி, அக்வா நிர்வாகத்தின் தொழிலா ளர் விரோத போக்கைக் கண்டித் தும், பணி நீக்கம் செய்யப்பட்ட தேவராஜை உடனயாகப் பணி யில்சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தியும் செவ்வாயன்று கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறு முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமார், மாநில துணை தலைவர் எம்.சந்தி ரன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். முன்னதாக அக்வா நிறுவனத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் குறித்து சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்ம நாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, சிஐடியு இன்ஜினியரிங் அரங்கத்தின் செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் உரையாற்றி னர்.  ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம்  மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.பெருமாள், ஆர்.வேலுசாமி உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்று அக்வா நிறு வனத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.