tamilnadu

img

தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை, மே 28 - கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதி களில் தனி மனித இடைவெளி முறை யாக பின்பற்றப்படுகிறதா என மாந கராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.  கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், பூ மார்க்கெட் பகு தியில் செயல்பட்டு வரும் கடைக ளிலும், மத்திய மண்டலம், தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் செயல் பட்டு வரும் கடைகளிலும் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதியில் தனிமனித இடைவெளி முறையாக பின்பற்றுகின்றார்களா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பார்வை யிட்டு களஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர், மேற்கு மண்டலம், பூ மார்க்கெட் பகுதியிலுள்ள அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உண வுகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் லட்சுமணன், உதவி ஆணையர்கள் ஜே. செந்திலரசன், மகேஷ்கனகராஜ், மேற்கு மண்டல செயற்பொறியாளர் எஸ். ரவிச்சந்தி ரன், உதவி நகரமைப்பு அலுவலர்கள் செந்தில்பாஸ்கர், சத்யா மற்றும் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

;