தாராபுரம், அக். 30- தாராபுரம் ஊராட்சி பகுதிகளில் பயன்பாட் டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடும் பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது. திருச்சி மணப்பாறை யில் மூடப்படாத ஆழ் துளை கிணற்றுக்குள் 2 வயது சிறுவன் சுஜித் தவறி விழுந்து உயிரிழந்தை தொடர்ந்து தமிழக அரசு மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை முடி மழைநீர் சேகரிப்பு நிலையங்களாக மாற்ற உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து தாரா புரம் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட பகுதிகளில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை முடும் பணி நடைவருகிறது. தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) ஜீவானந்தம் தலை மையில் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறு கள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அப்போது, கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக் குட்பட்ட அம்மன்நகர், அம்மாபட்டி உள் ளிட்ட பகுதிகளில் இருந்த 6 ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பாக முடி போட்டு மூடப்பட்டது. இந்த ஆய்வின் போது துணை வட்டார வளர்ச்சி அலு வலர் சம்பத், கவுண்டச்சிபுதுர் ஊராட்சி செய லாளர் சுப்பிரமணி ஆகியோர் உடனி ருந்தனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவானந்தம் தெரிவிக்கையில், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மூடப்படாமல் உள்ள ஆழ் துளை கிணறுகளை மூட தொடர்ந்து நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரி வித்தார்.