tamilnadu

img

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் நிவாரணம்

கோவை, ஆக.11- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆனை மலை பழங்குடியின மக்களுக்கு இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் நிவா ரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு வழங் கப்பட்டது. கோவை மாவட்டம், ஆனைமலை பகுதிக்குட்பட்ட சர்க்கார்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் அண்மையில் பெய்த கன மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு 20 குடிசை வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 30 குடும்பங்கள், மற்றும் நாகூர் மலைவாழ் மக்கள் குடி யிருப்பு பகுதியில் மழையால் பாதிக்கப் பட்ட 30 குடும்பங்களுக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோவை கோட்டத்தின் சார்பில் சமையல் பாத்திரம் போர்வை, சேலை, ரொட்டி, பிஸ்கட் உள் ளிட்ட ரூ.30 ஆயிரம் மதிப்புமிக்க பொருட் கள் சேகரிக்கப்பட்டு ஞாயிறன்று பாதிக்கப் பட்ட மக்களுக்கு வழங்கினர். இதில், தென் மண்டல இணைச் செயலா ளர் வி.சுரேஷ், கோட்ட சங்க பொது செயலாளர் கே.துளசிதரன், பொருளாளர் கே.மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் பி.சுவாமிநாதன், ஆர்.முத்து குமார் உள் ளிட்ட பொள்ளாச்சி பகுதி ஊழியர்கள் பங் கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய் குமார், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.பரமசிவம், முத்து லட்சுமி, காளீஸ்வரன் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.

;