tamilnadu

img

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்காதே இன்சூரன்ஸ் ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக.2- எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், முதல்நிலை அதிகாரிகள் சார்பில் வெள்ளியன்று தருமபுரி எல்ஐசி அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்திய அரசின் மிகப்  பெரிய பொதுத்துறை   நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை பங்கு சந்தையில் விற்பது என மத்திய மோடி அரசு முடிவு செய்துள்ளது. இம்முடிவை கைவிட கோரியும், எல்ஐசி துறையில் அந்நிய முதலீடு உச்சவரம்பை 49 சதவிகி தத்தை 74 சதவிகிதமாக உயர்த்தும் முடிவை  கைவிடக் வேண்டும். தொழிலாளர் நலச்  சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், முதல் நிலை அதிகாரிகள் மேலும் வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் தரும புரி எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கிளைத் தலைவர் சந்திர மெளலி தலைமை வகித்தார். கோட்ட இணைச் செயலாளர் ஏ.மாதேஸ்வரன், முது நிலை அதிகாரி சங்க தலைவர் சதீஷ்பிரபு, வளர்ச்சி அதிகாரிகள் சங்க நிர்வாகி ரகுபதி,  ஓய்வுபெற்றோர் ஊழியர் சங்கத்தின் நிர்வாகி சுகுணா பாண்டியன் உள்ளிட் டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில், பொருளாளர் சரவணக்குமார் நன்றி கூறினார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரூர், பாலக்கோடு கிளைகளிலும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

;