tamilnadu

பரிசோதனையை அதிகப்படுத்துக - திமுக கோரிக்கை

கோவை, ஜூன் 17- கோவை மாவட்டத்தில், கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண் டும் என கோவை மாநகர் கிழக்கு திமுக வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்   இதுகுறித்து கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக துவக்கத்திலி ருந்தே, பரிசோதனை மற்றும் இறப்பு குறித்து அரசு தகவல்களில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று தி.மு.க. உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக வலி யுறுத்தி வந்தது. இந்நிலையில் 50 லட்சம் மக்கள் வசிக்கும் கோவை மாவட்டத்தில், ஜூன் 7 ஆம் தேதி வரை வெறும் 22,872 பேருக்கு மட்டுமே பரிசோதனைகள் செய் யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுள்ள வர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப் பதும், மற்றவர்களுக்கு நோய்ப் பரப்பாத வகையில் அவர்களைத் தனிமைப்படுத் துவதும்தான் கொரோனா தொற்று பர வாமல் தடுக்க ஒரே வழி. ஆனால், கோவை யில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கோவையில் போதுமான அளவில் பரிசோதனைகள் நடைபெறவில்லை. கோவையில்,  தினமும் குறைந்தது ஆயிரத்து 500 பேர் முதல் 2,000 பேர் வரை பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.

ஆனால், இப்போது கோவை மாவட்டத்தில் தினமும் 50 முதல் 100 பரிசோதனைகள் கூட செய்யப்படவில்லை என்று தகவல் வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், கோவையில் பாதிப்பு மோசமாக இருக்கும்.  எனவே, கோவை மாவட்ட நிர்வாகம் விரைவாக செயல்பட்டு, திட்டத்தை உரு வாக்கி, மக்களுக்கு புள்ளிவிவரங்களை வெளிப்படையாக தெரியப்படுத்தி, தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்த 24 மணிநேர உதவி எண் ஏற்படுத்த வேண்டும்.  இனிவரும் காலங்களிலாவது, கோவையில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை பரவலாக்கி, அதிகப்படுத்த வேண்டும். இந்தத் தொற்று பரவுதல் மற்றும் இதைக் கட்டுப்படுத்துதல் விஷயத்தில் கோவை மாவட்ட நிர்வாகம் மிகவும் விழிப்புடனும், திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

;