tamilnadu

img

கேள்விகள் ????

மறுகூட்டல் விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு...,

பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் எந்த அளவுக்கு எழுதினோமோ அந்த அளவுக்கு மதிப்பெண்கள் கிடைக்கவில்லையே என்ற கவலையில் மறுகூட்டலுக்கு பலரும் விண்ணப்பித்திருப்பார்கள். மே-4 ஆம் தேதிக்குள் இதற்கான விண்ணப்பத்தை அளித்திருக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்துள்ளவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஒப்புகைச் சீட்டை மிகவும் பத்திரமாக வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். அந்தச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை வைத்துதான் மறுகூட்டல் முடிவுகளைத் தெரிந்து கொள்ள முடியும்.


கால்நடை மருத்துவராக விருப்பமா?

கால்நடைமுறை மருத்துவராக விருப்பமுள்ளவர்கள் மே மாதம் 8 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, ஒரத்தநாடு, நாமக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 360 இடங்கள் இருக்கின்றன. இதற்கான விண்ணப்பங்களை www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் நிரப்பிக் கொள்ளலாம். மே 8 ஆம் தேதி காலை பத்து மணி முதல் ஜூன் 10 ஆம் தேதி மாலை 5.45 மணிவரையில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ்களுடன் தலைவர், சேர்க்கைக்குழு(இளநிலைப் பட்டப்படிப்பு), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை - 600051 என்ற முகவரிக்கு ஜூன் 10 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


பொறியாளராக விரும்புவரா நீங்கள்..?

பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பொறியாளராக ஆகும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் தற்போது விண்ணப்பிக்கலாம். ஒருவேளை ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டால் அதைத் தவிர்க்க அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இணையதளம் மூலமாகவே கட்டணத்தைச் செலுத்தலாம். அவ்வாறு செலுத்த இயலாதவர்கள் டிமாண்ட் டிராப்ட் எடுத்து அதை சேர்க்கை சேவை மையத்தில் தரலாம்.

ஆன்லைன் விண்ணப்பம் துவக்க தேதி - மே 2

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி - மே 31

விண்ணப்பத்தில் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை மிகவும் சரியாகத் தர வேண்டும். அனைத்துத் தகவல்களும் இவற்றின் வாயிலாகத்தான் வரும். 

மேலும் விபரங்களுக்கு 044-22351014 மற்றும் 044-22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

;