கோவை, ஜூலை 30- கோவை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள விரிவுரை கூட்டரங்கில் செவ்வாயன்று மருத்துவமனை தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்து லட்சுமி ரெட்டியின் பிறந்த நாளான ஜூலை 30-ஐ மருத்துவமனை தினமாக கொண்டாட அரசு உத்தர விட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மருத்துவமனை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி யாக, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் மருத்துவமனை தினம் கொண்டாடப் பட்டது. இந்த நிகழ்வு மருத்துவமனையின் சாதனை களை பறைசாற்றவும், மருத்துவமனைக்கு உதவும் கொடையாளர்களைக் கௌரவப்படுத்தவும் வாய்ப் பாக அமைந்துள்ளது என மருத்துவமனை நிர்வாகத் தினர் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசமணி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்து மனை யின் முதல்வர் டாக்டர் அசோகன், மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மாநகராட்சி ஆணையாளர் ஷ்வரன் குமார் ஜடாவத், சர்வதேச விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம், மருத்துவமனை கண்காணிப்பாளர் சடகோபன், மருத்துவமனையின் இருப்பிட மருத்து வர் சௌந்திரவேல் மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், பொள்ளாச்சி தலைமை அரசு மருத் துவமனையில் வருவாய் கோட்டாட்சியர் இரா.ரவிக் குமார் தலைமையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கர்ப்பிணி பெண்ணிற்கு வளைகாப்பு விழா கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து தலைமை மருத்துவர் ராஜா மற்றும் கலைசெல்வி, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன், நோயாளிகள் நலச்சங்கத் தின் உறுப்பினர்கள் வெள்ளை நடராஜன் மற்றும் கவி ஞர் முருகானந்தம், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.