tamilnadu

img

கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் கனமழை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் பயிர்கள் சேதம்

கோபி, அக். 13- கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரப்பகுதிகளில் பெய்த கனமழை யினால் கீரிப்பள்ளம் தடப்பள்ளி வாய்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளது ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிக ளில் சனியன்று இரவு கனமழை பெய் தது. இதனால் நகராட்சியின் மையப்பகுதியில் செல்லும் கீரிப் பள்ளம் ஓடைதடப்பள்ளிவாய்க்கால் ஆகியவற்றில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது. இந்த மழை நீர் நேரடி யாக சென்று தடப்பள்ளிவாய்க்கால் பாசனபகுதியில் உள்ள விளை நிலங் களில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர் களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பிரசித்தி பெற்ற பாரி யூர் கொண்டத்துக் காளியம்மன் கோயில் வளாகத்திலும் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தடப்பள்ளிபாசன வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளம் கரைகளை தாண்டி வயல்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது.

நடவு முடிந்து ஒருமாத மே ஆகியுள்ள நிலையில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் வாழை கரும்பு உள்ளிட்ட பயிர்களை வெள்ளநீர் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் ஒவ்வொரு முறையும் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழை பெய்யும்போது கீரிப்பள்ளம் ஓடையில் ஏற்படும் மழைவெள்ளம் தடப்பள்ளி வாய்காலில் கலப்பதால் இவ்வாறு பாதிப்பு ஏற்படுகிறது என் றும் கீரிப்பள்ளம் ஓடையிலிருந்து வரும் தண்ணீரை மாற்று வழியில் வெளியேற்ற வேண்டும் என்றும் விவ சாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட  பயிர்கள் கடும் சேதமடைந்துள்ளதா கவும் நீர் வடிந்தால் தான் சேதமதிப்பு தெரிய வரும் எனறும் சுமார் ஒரு கோடி மதிப்பிலான சாகுபடி பயிர்கள் சேதமடைந்திருக்கலாம் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மழைவெள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கோட்டாட்சியர் ஜெய ராமன், வாட்டாட்சியர் விஜயகுமார்,  வருவாய் ஆய்வாளர் ராஜித்குமார்  ஆகியோர் நேரில் பார்வையிட்டு சேதமதிப்புகளை ஆய்வு செய்து வரு கின்றனர். கோபிசெட்டிபாளையம் தாலுகாவில் சனியன்று இரவு அதிக பட்சமாக 134 மி.மீ-ரும் நம்பியூர் தாலு காவில் 120 மி.மீமழையும் பதிவாகி யுள்ளது.

;