tamilnadu

img

பட்டா வழங்கிய இடத்தை ஒப்படைத்திடுக ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு

உடுமலை, ஜூன் 25- பட்டா வழங்கப்பட்டு பத்தாண்டுகள் முடிந்த பின்னும் இடத்தை காண முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.   குடிமங்கலம் ஒன்றியம், கோட்டமங்கலம் ஊராட்சி  முருக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட் டவர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு வருவாய்த் துறையின் சார்பில் பட்டா  வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த இடத்தை  அடையாளம் காண முடியா ததால், உடனடியாக பட்டா  பெற்ற அனைவருக்கும் தீர்வு காண வலி யுறுத்தி உடுமலை வட்டாட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியில் பொது மக்கள் மனு அளித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில், எங்களுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு  பட்டா வழங்கப்பட்டது. ஆனால் பட்டா விற்கான இடத்தை இதுவரை காணமுடிய வில்லை. இதுகுறித்து பல முறை வரு வாய்த்துறையினரிடம் மனு அளிக்கப் பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை.  மேலும் வருவாய்த்துறையினர், உங்களுக்கு வழங் கப்பட்ட பட்டா பத்தாண்டு ஆனதால் காலாவதி ஆகிவிட்டது கூறினர். இதை யடுத்து,  அரசுக்கு சொந்தமான வேறொரு இடத்தை காட்டி இங்கு வசித்து கொள் ளுங்கள் என்றனர். அவ்விடத்தில் தற் போது குடிசை அமைத்து வசித்து வரு கிறோம். எனவே தற்போது வசித்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கவேண்டும். அல்லது 2008ஆம் ஆண்டு பட்டா வழங்கிய  இடத்தை வழங்க வேண்டும் என ஜமா பந்தியில் மனு அளித்தாக தெரிவித்தனர்.