tamilnadu

img

ஜமுக்காள வியாபாரத்தை பாதுகாக்க அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்திடுக

ஈரோடு, மே 9-ஜமுக்காள வியாபாரத்தை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என ஜமுக்காள வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் பவானியில் கைத்தறி நெசவில் தயாரிக்கப்படும் ஜமுக்காளம் பிரசித்தி பெற்றது.இந்த ஜமுக்காளம் எந்தவிதமான இயந்திரங்களையும் பயன்படுத்தாமல் நெய்யப்படும் குடிசை தொழில் ஆகும். இத் தொழில் செய்யும் வியாபாரிகள் அனைவரும் சிறு, குறு விவசாயிகள் ஆவர். 1954ஆம்ஆண்டு முதல் மத்திய அரசால்ஜமுக்காளத்திற்கு எந்தவிதமானவிற்பனை வரி, வருமான வரிபோன்றவைகள் இல்லை. இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டுமத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் 2017 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி எனப்படும் சரக்குமற்றும் சேவை வரி ஜமுக்காளத் தொழிலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இந்தஜமுக்காள தொழிலுக்காக நீண்ட காலமாக தபால் அலுவலகம் மூலமாக இந்தியாவில் உள்ள அனைத்துசிறிய மற்றும் பெரிய நகரங்களுக்கு விபிபி பார்சல் மூலமாக அனுப்பப்பட்டு விபிஎம்ஒ மூலமாக பணமாக அளிக்கப்பட்டு வந்தது. ரயில் மூலம் அனுப்ப 50 சதவிகிதம் கட்டண சலுகையை வழங்கி வந்தது.இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக விபிபி பார்சல்கள் அனுப்ப இயலவில்லை. அதற்கு மாறாக சிஒடி(ஊயளா டீn னுநடiஎநசல), பிசினஸ் பார்சல், எக்ஸ்பிரஸ் பார்சல் மூலம் அனுப்பப்பட்டு வந்நதன. விபிபி பார்சல் மூலம் அனுப்பியது போல சிஒடி பிசினஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் பார்சல் மூலம் சிறிய ரகங்களை அனுப்ப முடியவில்லை. அனுப்பிய ஜமுக்காளத்திற்கு உரியபணம் சரியான நேரத்தில் வருவதில்லை. மிகவும் காலதாமதம் ஆகிறது. சில சமயங்களில் வருடக்கணக்கில் கூட ஆகிறது. எனவே ஜமுக்காள வியாபாரிகளின் குறைகளை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகேட்டு பவானி கைத்தறி ஜமுக்காளம் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக சங்கத்தின் செயலாளர் நடராஜன் தலைமையில் ஈரோடு தலைமை தபால் நிலைய பொதுமேலாளரிடம் வியாழனன்று மனு அளித்துள்ளனர். இதில்சங்க தலைவர் பேச்சிமுத்து,பொருளாளர் ரமேஷ் பாபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், பார்சலுக்கான பணத்தை உரிய நேரத்தில் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபவானி தலைமை அஞ்சலகம் உள்ளிட்ட தபால் அலுவலகங்களுக்கு பலமுறை நேரில் சென்று புகார் மனுஅளித்துள்ளோம். இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. அஞ்சலக நிர்வாகமோ இதனை கண்டு கொள்ளாமல் புறக்கணித்து வருகிறது. எனவே ஜமுக்காளதொழிலாளர்களின் வாழ்வாதாரமான இந்த ஜமுக்காள வியாபாரத்தை பாதுகாக்கும் வகையில் அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் உண்ணாவிரதப் போராட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களின் வாயிலாக மத்திய மாநில அரசுகளுக்கு எங்களது நியாயத்தை எடுத்துக் கூறுவோம் எனத் தெரிவித்தனர்.

;