tamilnadu

img

புதிய கல்விக் கொள்கை வரைவை திரும்ப பெறுக

பொள்ளாச்சி, ஜூலை 29- மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவை திரும்பப் பெறக்கோரி பொள்ளாச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் கையெழுத்து இயக் கம் நடைபெற்றது. மோடி அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு திட்டத்தை உடனடியாக திரும்ப பெறக்கோரி யும், மாணவர்களின் கல்வி, எதிர் காலம் காக்கப்பட வேண்டியும் சூளேஸ்வரன்பட்டி எம்ஜிஆர்  சிலை முன்பு தாலுகா கமிட்டி உறுப்பினர் ஆர்.சேதுராமன் தலைமையில் ஞாயிறன்று கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது. இதன்தொடர்ச்சியாக திங்களன்று பொள்ளாச்சி கோட்டூர்ரோடு சாலையில் உள்ள நகராட்சி  பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்பு நடைபெற்றது. இதில் சூளேஸ்வரன்பட்டி கிளை செய லாளர் விஜயகுமார் மற்றும் முருகேசன், முத்து, பிரபாகரன், அங்கமுத்து, கிருஷ்ணகுமார், நடராஜன்,  மாரிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு
இதேபோல், ஈரோடு மாவட் டம் சத்தியமங்கலம் தாலுகா, கடம்பூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக் கத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கத்தின் மாநில தலைவர் எம்.சடையலிங்கம் தலைமை வகித்தார். சிபிஎம் மலை வட்டார செயலாளர் சி.துரை சாமி, மாவட்ட குழு உறுப்பினர் க.இரா.திருத்தணிகாசலம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மலைவாழ் இளைஞர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் சின்னசாமி, மாதர் சங்கத்தின் மலை வட்டார செய லாளர் தாயிலம்மாள், மலை வட் டார தலைவர் பழனியம்மாள், கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கிளை செயலாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர். இதேபோல் சத்தியமங்கலத் தில் நகர செயலாளர் பி.வாசுதே வன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம் தாலுகா செயலா ளர் கே.எம்.விஜயகுமார் , மாவட்ட குழு உறுப்பினர்கள் எம்.அண்ணா துரை, திருத்தணிகாசலம் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.