tamilnadu

வெண் பன்றி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி

ஈரோடு, ஆக.17- வெண் பன்றி வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி யில் சேர விண்ணப்பிக்க லாம் என கால்நடை மருத் துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.  இதுகுறித்து பயிற்சி மையத் தலைவர் ரா. யசோதை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது, வீரப்பன் சத்திரத்தில் உள்ள கால் நடை மருத்துவப் பல் கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தில் வரும் ஆக.19, 20  ஆகிய தேதிகளில் வெண் பன்றி வளர்ப்பு குறித்த பயிற்சி  இலவசமாக அளிக்கப்பட வுள்ளது. ஆகஸ்ட் 19 ஆம் தேதி விரிவான பாடங் கள் நடத்தப்பட்டு, கலந்து ரையாடல், வீடியோ படக் காட்சி, கேள்வி-பதில் பகுதி இடம் பெறும்.  ஆகஸ்ட் 20 ஆம் தேதி  அருகில் உள்ள வெண் பன்றி பண்ணைக்கு அழைத்து செல்லப்படுவர். எனவே விவசாயப் பண் ணையாளர்கள், மகளிர் குழுவினர் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்கள் அறிய கால்நடை மருத்து வப் பல்கலைக் கழக பயிற்சி, ஆராய்ச்சி மையம், 306 சத்தி சாலை, சி.என்.கல்லூரி அருகில், ஈரோடு என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0424 2291482 என்ற தொலைபேசி எண் ணிலோ தொடர்பு கொள்ள லாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது.