தாராபுரம், மே 13-தாராபுரம் அருகே கரும்பு காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள கரும்புகள் எரிந்து சேதமானது.தாராபுரம் அடுத்துள்ள செலாம்பாளையம் சோமனுத்து கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஆறுச்சாமி (50). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 4 ஏக்கரில்கரும்பு சாகுபடி செய்திருந்தார். கரும்பு பயிர்நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இவர் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்தம் போட்டிருந்ததால் ஆலையில் இருந்து கள அலுவலர்கள் ஆய்வு செய்து வெட்டுவதற்கான உத்தரவிற்காக காத்திருந்தனர்.இந்நிலையில் சோமனுத்து, செலாம்பாளையம், ரஞ்சிதாபுரம் பகுதியில் பலத்தசூறாவளி காற்று வீசியதன் காரணமாக ஆறுச்சாமி தோட்டத்தில் உயர் மின்அழுத்தஒயர் அறுந்து விழுந்து கரும்பு காட்டில் தீ பிடித்தது. இதுகுறித்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் அம்சராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இத்தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள கரும்பு எரிந்துசேதமானது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.