tamilnadu

img

போராடிய விவசாயிகள் மீது பொய் வழக்கு: வாபஸ் பெற விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்

திருப்பூர், டிச. 13 – உயர் மின்கோபுர எதிர்ப்பு விவசா யிகள் கூட்டியக்கத்தினருக்கு ஆதர வாக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறுமாறு விவசாய சங்கங்கள் வலியு றுத்தி உள்ளன. கடந்த செப்.13 அன்று குண்டடம் பகுதியில் உயர்மின் கோபுரம் அமைப் பதற்கு, நில அளவைப் பணி செய்ய பவர்கிரீட் மற்றும் வருவாய்த் துறை யினர் விவசாய விளைநிலங்களில் அத் துமீறி நுழைந்தனர். விளைநிலம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதைத் தடுத்து நிறுத்தினர். அப்போது காவல் துறையினர், உயர்மின்  கோபுர எதிர்ப்பு விவசாயிகள் கூட்டியக்கத் தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஈசன், முத்து விஸ்வநாதன், சண்முகசுந்தரம், பார்த்தசாரதி, தங்கமுத்து உள்ளிட்ட தலைவர்களை கைது செய்து சிறை யில் அடைத்தது. இதைக் கண்டித்து செப்.16ஆம் நாளன்று, கட்சி சார்பற்ற தமிழக விவ சாயிகள் சங்கத்தினர் பல்லடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் அவர்கள் சாலை மறியல் செய்ததாக காவல் துறை பொய் வழக்கு பதிவு செய்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 27 பேரை டிசம்பர் 12ஆம் தேதி பல்லடம் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி குற்றப்பத்திரிகை வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில் பல்லடம் ஜெயப் பிரகாஷ் வீதியில் உள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழு அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற் றது. இதில் தமிழக விவசாயிகள் பாது காப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஈசன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் பல்லடம் ஒன்றிய செயலாளர்வை.பழனி்சாமி, பல்ல டம் வட்டார தலைவர் கே.வி.சுப்பிர மணியம் மற்றும் வேங்கிபாளையம் துரைசாமி, சிஐடியு துணைத் தலைவர் ப.கு.சத்தியமூர்த்தி ஆகியோர் பாதிக் கப்பட்ட விவசாயிகளை வாழ்த்தி சிறப் பித்தனர். மேலும் தமிழக அரசு விவசாயிகள் மீது போட்டிருக்கும் பொய் வழக்கை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் இக்கூட்டத் தில் வலியுறுத்தப்பட்டது.

;