உடுமலை, மார்ச் 13- இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு மற்றும் கை கழுவும் முறை குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது. உலகெங்கிலும் கொரோனா வைரஸ் மிக வேக மாக பரவி வருகிறது. உலக நாடுகள் அனைத் தும் அதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு வகைகளில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலை யில், தமிழக அரசும் பல்வேறு சுகாதார முன் னேற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணாக்கர்களிடையே இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு கையே டும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் துவதற்காக குறும்படத்தையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வருமுன் காப்பது சிறந்தது என்ற கருத்தின் அடிப்படையில் தங்களை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. குறைந்தபட்சம் 20 வினாடிகள் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றும், தும்மல் மற்றும் இரு மலின் போதும் கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும் என்றும் மாணாக்கர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணாக்கர்கள் அனைவ ருக்கும் கைக்குட்டைகள் வழங்கப்பட்டது. தமிழக அரசால் வெளியிடப்பட்ட குறும்படம் ஒளிபரப் பப்பட்டது.