tamilnadu

ஈரோடு மற்றும் உடுமலை முக்கிய செய்திகள்

சிபிஎம் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

பொள்ளாச்சி, டிச.19-  கோவை மாவட்டம் வடசித்தூர் 7 வது வார்டில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று பேரில் இருவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சிபிஎம் வேட்பாளர் சித்ரா போட்டியின்றி தேர்வாகியுள்ளார். தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்த லானது வருகின்ற டிச 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி தமிழகத் தின் அனைத்து பகுதியிலும் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு  உட்பட்ட  வடசித்தூர் 7 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சரண்யா, நீலவேணி மற்றும் சித்ரா மனுதாக்கல் செய்தனர்.  இதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் வியாழனன்று பரிசீலனை செய்யப்பட்டது. இதில் சரண்யா மற்றும் நீலவேணி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் தொடர் எண் தவறாக உள்ளதாக குறிப்பிட்டு  இருவரின் மனுக்கள் நிராகரிப்பு செய்யப் பட்டது. இதன் மூலம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் வேட்பாளர் சித்ரா 7 வார்டு உறுப்பின ராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

 ஊரக உள்ளாட்சி தேர்தல்

ஆவணமின்றி ரூ.50,000 மேல் எடுத்து செல்ல தடை

ஈரோடு, டிச. 19- ஊரக உள்ளாட்சி தேர்தல் விதிகளின் படி வேட்பா ளரோ, அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்லது கட்சி ஊழியர்கள் உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகையை எடுத்துச் செல்லக்கூடாது என தேர்தல் அலுவலர் கதிரவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணை யத்தின் அறிவிப்பின்படி தேர்தல் நன்னடத்தை விதிகள் ஊரகப் பகுதிகளில் அமலில் உள்ளது. இதை கண்கா ணிக்கும் பொருட்டு 15 க்கும் மேற்பட்ட பறக்கும்ப டைகள் அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை அலுவ லர்கள் காலை, மதியம், இரவு என சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். தேர்தல் ஆணைய மாதிரி நன்னடத்தை விதிகளின் படி வாக்காளர்களை கவரும் நோக்கில் வேட்பாளரோ, அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்லது கட்சி ஊழியர்களோ உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தொகையோ  அல்லது போஸ் டர்கள், போதை வஸ்துகள், மதுபானங்கள், ஆயுதங் கள், ரூ.10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசுப் பொருட் களோ எடுத்துச் செல்லக்கூடாது. மீறினால் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வீடியோ குழுவினரால் பதிவு செய்யப்படும். இதனை தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட  வீடியோ சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.  மேலும் உள்ளாட்சி தேர்தல் 2019 தொடர்பாக பணியமர்த்தப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பணி யாளர்கள் முதற்கட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள தவறிய பட்சத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பயிற்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். மேலும் இப்பயிற்சிகளில் கலந்து கொள்ளாத அலுவலர்கள் மற்றும் பணியா ளர்கள் மீது துறை வாரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

திருக்குறள் ஓப்பிக்கும் போட்டி

நீலகிரி, டிச. 19 - தமிழ் வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில் 1330 குறட்பாகளையும் மனப்பாடம் செய்து முழுமையாக ஓப்பிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு தொகையாக வழங்கப்படவுள்ளதாக தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலக செய்திகுறிப்பில் கூறியதாவது, மக்களின் வாழ்க்கைக்கு வழியாட்டியாக விளங்கும் உலக் பொதுமறையாம் திருக்குறளின் சீரிய கருத்துக்களை இளம் தலைமுறையினர் மனதில் பதியச் செய்து அவர்களை நல் வழிபடுத்தும் நோக்கில் 1330 குறட்பாக் களையும் மனப்பாடம் செய்து ஓப்பிக்கும் திறன் கொண்ட மாணவர்களுக்கு பரிசு தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். மேலும் விண்ணப்பங்களை வருகிற டிச.30 ஆம் தேதிக்குள் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியரக வளாகம், நீலகிரி மாவட்டம் என்ற முகவ ரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ ootytamilvalarchi@gamail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

போலீஸ் எனக்கூறி  ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிப்பு

கோவை, டிச. 19 – தங்க நகை வியாபாரியிடம் போலீஸ் என கூறி ரூ. 24 லட்சம் மதிப் புள்ள தங்க நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் கோவையில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் நகை வியாபாரி சின்னையா (53).  செல்வபுரம் பகுதி யில் உள்ள நகை பட்டறையில் தங்க கட்டிகளை கொடுத்து நகையாக மாற்றிச் செல்வது வழக்கம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வபுரம் பகுதியில் உள்ள நகை பட்டறையில்  ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்க நகை கட்டியை நகையாக மாற்ற கொடுத் துள்ளார். இந்த நிலையில், தங்க கட்டி களை 650 கிராம் நகைகளாக மாற் றிய சின்னையா, மீண்டும் பொள் ளாச்சி செல்வதற்காக ஆட்டோ மூலம் உக்கடம் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது, பெரிய கடை வீதி சித்தி விநாயகர் கோயில் அருகே திடீரென ஆட்டோவை வழிம றித்த கும்பல், தாங்கள் போலீஸ் எனக் கூறி சின்னையா கொண்டு வந்த பையை  சோதனையிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அவரிடமிருந்த நகையை கைப்பற்றிவிட்டு, சின்னையாவை காவல் நிலையத்திற்கு வந்து கையெ ழுத்திட்டு பெற்றுச் செல்லும்படி செல் லும்படி தெரிவித்துவிட்டு அந்தப் பகு தியை விட்டு சென்றுவிட்டனர். இதன்பின்னர் அவர் காவல் நிலை யம் சென்ற பின்னரே, அவரின் 650 கிராம் தங்க நகை கொள்ளை யடிப்பட்டது தெரியவந்தது. இதை யடுத்து சின்னையா, பெரியகடை வீதி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். மேலும், நகைகளை பறித்துச் சென்றவர்கள் நகை கொள்ளையர்கள் எனவும், அவர்கள் மஃப்டி போலீஸ் என்று கூறி நகைகளைப் பறித்து சென் றதும் தெரியவந்துள்ளது. இந்த சம்ப வம் தொடர்பாக பெரியகடை வீதி குற்றப்பிரிவு போலீசார், செல்வபுரம் பகுதியிலிருந்து சம்பவ பகுதிவரை உள்ள பல்வேறு பகுதிகளில் இருக் கும்     சிசிடிவி     கேமராக்கள் மூலம் குற்றவா ளிகளை கண்காணித்து வருகின்றனர். இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் போலீஸ் என கூறி நகை வியாபாரியிடம் இருந்து நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய தானியங்கி தீர்வு திட்டம்

ஈரோடு,டிச 19- ஈரோடு வீட்டு வசதி வாரியத்தின் மாத வாடகை தவணைத் தொகையினை தேசிய தானியங்கி தீர்வு திட்டத்தின் கீழ் ‘இன்டஸ்லேண்ட்”  வங்கி மூலம் செலுத்தலாம் என ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளதாவது, ஈரோடு வீட்டு வசதி வாரியத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வாடகை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள கடை, அலுவலகம் சொந்த மனை,  வீடு,  அடுக்கு மாடி குடியிருப்பு  வாசிகள் செலுத்தும் மாத தவணைத் தொகையினை தேசிய தானியங்கி தீர்வு திட்டத்தின் கீழ் ‘இன்டஸ்லேண்ட்” வங்கி மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த விளக்க கலந்தாய்வு கூட்டம் வரும் டிச.21 ஆம் தேதி (சனியன்று) ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு-ல் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய விருந்தினர் மாளிகையில் நடைபெற இருப்பதால் ஒதுக்கீடுதாரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளாலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்க 5ஆவது மாநில மாநாடு

 இன்று தருமபுரியில் துவங்குகிறது ,3 மாதங்களாக வேலை

தருமபுரி, டிச.19- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் 5ஆவது மாநிலமாநாடு தருமபுரியில் இன்று (டிச.20) துவங்குகிறது. அங்கன்வாடி ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி குறைந்த பட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரமும், உதவியாளர்களுக்கு ரூ.18 ஆயிரமும்  வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். இத்திட்டத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதைக் கைவிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநாடு டிசம்பர் 20,21 ஆகிய தேதிகளில் தருமபுரி வன்னியர் திரு மண மண்டபத்தில் நடைபெறுகிறது.  இம்மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் சி.அங்கம்மாள் தலைமை வகிக்கிறார். மாநிலச் செயலாளர் என்.சுசிலா கொடியேற் றிவைக்கிறார். சிஐடியு மாநிலத்தலைவர் ஏ.சவுந்தரராசன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி, மாநிலப் பொரு ளாளர் எம்.பாக்கியம் ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசுகின்றனர் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகு மார், மாநிலப்பொருளாளர் மாலதி சிட்டிபாபு ,அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலை யான், மாநிலச்செயலாளர் கே.சி.கோ பிகுமார்,உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்பு குழு மாநில அமைப்பாளர் எம்.தனலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கு கின்றனர். அகில இந்திய பொதுச்செய லாளர் ஏ.ஆர்.சிந்து நிறைவுரையாற் றுகிறார்.

சம்பளமின்றி தவிக்கும் தொழிலாளர்கள்

கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு இன்று கஞ்சித் தொட்டி திறப்பு

உடுமலை, டிச. 19- ஆலை சுத்திகரிப்பு பணிகளை தொடங்க தொழிலாளர்களை அழைக்க மறுக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்தும், வேலை, சம்பளம் இன்றி தவிக் கும் தொழிலாளர்களுக்காக இன்று கஞ்சித் தொட்டி திறக்கப்படுகிறது. உடுமலை அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இதில் சுத்திகரிப்பு பணிகள் தொடங்காததால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட் டுள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களாக ஆலை சுத்திகரிப்பு பணிகளை தொடங்க, தொழிலாளர்களை ரீ கால் செய்ய வேண்டும் என கடிதம் மூலமும், நேரிலும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு கோரிக்கை விடுத்தது. அதன்படியாக உட னடியாகத் தொழிலாளர்களை மீண் டும் அழைக்க வேண்டும். சுத்திகரிப்பு பணிகளை தொடங்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது. ஆனால் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. அதேசமயம்  கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை. இது தொடர்பான கோரிக்கையும் ஊதாசீனப்படுத்தப்பட்டது. இதனால் தொழி லாளர்களின் குடும்பங்கள் மிகுந்த சிரமத்து டன் அன்றாடம் தவித்து வருகின்றனர்.        இந்நிலையில், சர்க்கரை ஆலை அலு வலகம் முன் வெள்ளியன்று கஞ்சித் தொட்டி திறக்கப்படும் என அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு அறிவித்துள்ளது. 

;