பூண்டி பேரூராட்சியில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்
அவிநாசி, ஜூலை 7- அவிநாசி அடுத்த தேவராயன் பாளையத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கோரி ஞாயிறன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத் திட வேண்டும். குடிநீர் இணைப்பு இல் லாத வீடுகளுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தி வாரம் இருமுறை குடிநீர் வழங்க வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த வேண்டும். சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தேவராயன்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் உடனே சரி செய்ய வேண்டும். தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும். மின் வாரியத்தில் உள்ள சீர்கேடுகளை நீக்கி கூடுதல் வயர் மேன்களை உடனே பணியமர்த்த வேண்டும். நியாய விலைக்கடையை முழுநேர கடையாக மாற்றி அமைக்க வேண்டும் எனக்கோரி தேவராயன்பாளை யம் நியாய விலைக்கடை முன்பு சிபிஐ சார்பில் கிளை செயலாளர் அபுசாலி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், திருப்பூர் மாவட்டச் செயலாளர் ரவி, இடைக்குழு செயலாளர் பி.ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நீர் நிலைகளை பராமரிக்க வேண்டுகோள்
ஈரோடு, ஜூலை 7- ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் தொண்டு நிறுவனங்கள் நீர் நிலைகளைப் பராமரிக்க வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்ற பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் என சுமார் 1240 நீர்நிலைகளை பராமரித் தும், தூர்வாரியும் சீர்படுத்திட பொதுமக்கள் அனைவரும் தன்னார்வத்துடன் முன்வர வேண்டும். அதேபோல் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களின் அருகில் இருக்கும் நீர்நிலைகளைப் பராமரிக்க வேண்டும். தொழிற்சாலைகள் தங்கள் அருகே இருக்கும் ஏரிகள் மற்றும் குளங் களைப் பராமரிப்பதன் மூலம், மழை காலங்களில் நீர்நிலைகள் நிரம்பி அவர் களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் தனியார் நிறுவனத்தினர் அனைவரும் உடனடியாகத் தங்களது கட்டிடங்களுக்கு மழைநீர் சேகரிப்புத் திட்டத்தினை செயல்படுத்தி சம்பந்தப்பட்ட அலுவலர் களிடம் ஒப்புதல் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.