tamilnadu

img

சம வேலைக்கு சம ஊதியம் வழங்குக திருப்பூரில் உழைக்கும் பெண்கள் மறியல் - கைது

திருப்பூர், மார்ச் 6 - சம வேலைக்கு சம ஊதியம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு முடிவு கட்டு வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உழைக்கும் பெண்கள் அமைப்பு திருப்பூரில் நடத்திய மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதானார்கள். மார்ச் 8ஆம் நாள் 105ஆவது ஆண்டு சர்வதேச பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு இந்தியாவில் உழைக்கும் பெண்களின் அடிப் படை வாழ்வாதாரக் கோரிக்கை களை முன்வைத்து மார்ச் 6ஆம் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டத்தை நடத்துவது என்று கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற சிஐடியு அகில இந்திய 16ஆவது மாநாடு தீர்மானித்திருந்தது.

அதன்படி பெண்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப் படுத்த வேண்டும். சம வேலைக்கு ஆண்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் சட்டத்தை கைவிட வேண்டும். பெண் தொழிலாளர் களுக்கு பாலியல் புகார் கமிட்டி களை பணியிடங்களில் அமைக்க வேண்டும். கிராமப்புற நூறு நாள் வேலைத் திட்டப் பெண்களுக்கு உரிய ஊதியம், அடிப்படை வசதி களை நிறைவேற்ற வேண்டும். திட்டப் பணி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய் வோரை பணி நிரந்தரம் செய் வது, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர் களாக்கி வரையறுக்கப்பட்ட சம்பளம், பதவி உயர்வு வழங்கு வது, உள்ளாட்சிகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர் களுக்கு உரிய சட்ட, சமூகப் பாதுகாப்பு, நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்குவது, கேரளா வைப் போல் ஜவுளிக்கடை உள்ளிட்ட வர்த்தக நிறுவனங் களில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு அமர்வ தற்கு இருக்கை வசதி செய்து தருவது, முறைசாரா பெண் தொழி லாளர்களுக்கு பென்சன் பெறும் வயதை 55 ஆக நிர்ணயிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருப்பூரில் வெள்ளி கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர் தியாகி குமரன் நினை வகம் முன்பிருந்து சிஐடியு உழைக் கும் பெண்கள் அமைப்பினர் முழக்கங்கள் எழுப்பியபடி ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே சென்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.  உழைக்கும் பெண்கள் மறி யல் போராட்டத்தை சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ் தொடக்கி வைத்து உரை யாற்றினார். இப்போராட்டத் திற்கு உழைக்கும் பெண்கள் அமைப்பின் மாவட்ட கன்வீனர் எம்.பாக்கியம், உழைக்கும் பெண் கள் அமைப்பின் நிர்வாகிகள் எல்லம்மாள், வசந்தி, மல்லிகா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மறியலில் பங்கேற்ற னர். இதையடுத்து காவல் துறையி னர் அவர்களைக் கைது செய்து பார்க் ரோடு கே.எஸ்.ஆர். திரு மண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். உழைக்கும் பெண்க ளுடன் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உள்ளிட்ட நிர் வாகிகள், முன்னணி ஊழியர்க ளு்ம போராட்டத்தில் பங்கேற்று கைதானார்கள்.