கோவை, ஆக. 19 சமவேலைக்கு சம ஊதியம் என்பதை மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி டி.பாலன் இன்ஜினி யரிங் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டி.பாலன் நினைவு இன்ஜினிய ரிங் தொழிலாளர் சங்கத்தின் முதலாமாண்டு பேரவை ஞாயி றன்று மலுமிச்சம்பட்டி தியாகி கள் நிலையத்தில் நடைபெற்றது. சாலை போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். முன்னதாக இம்மாநாட்டில், சிறு, குறு தொழிலுக்கான ஜிஎஸ் டியை ரத்து செய்ய வேண்டும். சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும். சிறு, குறு தொழிலுக் கான வங்கிக்கடனை எளிமைப் படுத்தி குறைந்த வட்டியில் வழங்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் மத்திய அர சின் சட்டத்திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதனையடுத்து, இம்மாநாட் டில் சங்கத்தின் புதிய தலைவராக எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச் யலாளராக கே.மாரிமுத்து, பொரு ளாளராக எ.கந்தசாமி உள்ளிட்ட 9 நிர்வாகிகள் 7 பேர் கொண்ட நிர் வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது.