தருமபுரி, ஜூலை 6- சித்தேரி ஊராட்சியில் அமைக்கப்படும் நவீன வசதியு டன் கூடிய திருமண மண்டபத்தின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பழங்குடி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சித்தேரி கிராம ஊராட்சியில் தருமபுரி நாடாளு மன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதித்திட்டத்தில் 2017-18 ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில், நவீன வசதி யுடன் கூடிய திருமண மண்டபம் அமைப்பதற்கான அடிக் கல் நாட்டு விழா கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நடை பெற்றது. ஆனால், தற்போது வரை மண்டபத்தின் கட்டுமான பணிகள் தொடக்கநிலையில் உள்ளது. இதனால், சித்தேரி ஊராட்சிக்கு உள்பட்ட மலை கிராம மக்கள் திருமணம், காதணி விழா உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு கட்டட வசதியில்லாமல் அவதியுறும் நிலையுள்ளது. எனவே, திருமண மண்டபத்தின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பழங்குடி மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.