tamilnadu

img

யானைகள் முகாமை கண்டு வியந்த ரஷ்ய கலைக்குழு  

 

மேட்டுப்பாளையம், ஜன. 19- மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் யானைகளுக்கான புத்துணர்வு நலவாழ்வு முகா மிற்கு ஞாயிறன்று வருகை தந்த ரஷ்ய நாட்டு கலாச்சார கலைக்குழுவினர் தங்கள் நாட்டில் இல் லாத விலங்கான யானைகளை கண்டு பெரும் வியப்பில் ஆழ்ந்தனர்.  இந்திய – ரஷ்ய கலாச்சார பரிவர்த்தனை குழு சார்பில் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின்  நாட் டுப்புற நடன கலையினை கற்கவும், தங்களது ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற நடனக்கலையினை இங்குள்ள  நடன கலைஞர்களுக்கு கற்றுத்தரும் வகையிலும் ரஷ்யாவில் இருந்து 12 பெண்கள் கொண்ட நட னக்குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இக்குழுவினர் ஞாயிறன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் யானை கள் நலவாழ்வு முகாமை பார்வையிட்டனர். ரஷ்ய  நாட்டை பொறுத்தவரை, நிலத்தில் வாழும் பேரு யிரான யானைகள் வாழ்வதில்லை என்பதால் இவற்றை நேரில் காண ஆர்வமுடன் வந்திருந்தனர். தமிழக அரசின் சிறப்பு அனுமதி பெற்று வந்திருந்த இக்குழுவினரை முகாம் அதிகாரிகள் வரவேற்று யானைகளை காண அழைத்து சென்றனர். ஒரே  இடத்தில் முகாமில் பங்கேற்றுள்ள 28 யானைகளை யும் கண்டு ரசித்த இவர்கள், அவை குளிக்க வைக் கப்படுவதை வியப்புடன் பார்வையிட்டனர். இதுகுறித்து ரஷ்ய கலாச்சார பரிவர்த்தனை குழுவினர் கூறுகையில்,  இதுபோன்ற பிரமாண்டமா ன யானைகள் சொல் பேச்சு கேட்கும் குழந்தைகளை போல் முகாமில் பாரமரித்து வருவது தங்களை ஆச்சரி யப்பட வைத்தது. தமிழக நாட்டுப்புற கலைகள் எங்களை வியக்க வைத்ததை போன்றே இங்குள்ள யானைகளும் எங்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்றனர். இதனை தொடர்ந்து தங்களை முகாமிற்குள் அனுமதித்து யானைகளை பாதுகாப்பாக ரசிக்க உதவிய அனைவருக்கும் நன் றியை தெரிவித்தனர்.

;