பென்னாகரம், ஜூன் 16- பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் ஞாயிறன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், எச்சனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட காளேகவுண்டனூ ரில் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அருகில் உள்ள கிரா மங்களுக்கு சென்றும், விவசாய கிணறுகளுக்கு சென் றும் குடிநீர் எடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக அதி காரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் களேகவுண்டனூரில் காலை 6 மணி முதல் 8 மணிவரை அரசுப் பேருந்தை மறித்து பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த எச்சனஅள்ளி ஊராட்சி செயலாளர் தண்டபாணி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுக்கு குடிநீர் பஞ்சத்தை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையடுத்து பொது மக்கள்மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.