நாமக்கல், ஜூன் 23 - டாக்டர் அம்பேத்கர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் திருச்செங்கோட்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப் பட்டன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் டாக்டர் அம்பேத்கர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேலூர் சாலையில் உள்ள அவ்வை கல்வி நிலையத்தில் ஞாயிறன்று துவங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் ஏ.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் ஜி.கோபி வரவேற்புரையாற் றினார். திருச்செங்கோடு எல்.ஐ.சி நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன் வகுப்புக்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். டாக்டர் அம்பேத்கர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் அமைப்பாளர் கே.முருகேசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணன், தமிழ்நாடு மின்சார ஊழியர்கள் சங்கத்தின் நிர் வாகி கோவிந்தராஜ் மற்றும் ஆசிரியர்கள் அருள் தாஸ்,பானுரேகா, சிந்துபாரதி, கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் டாக்டர் அம்பேத்கர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங் கிணைப்பாளர் எம்.கணேஷ்பாண்டியன் நன்றியுரை யாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.