tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திருப்பூர், தாராபுரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச. 17 - குடியுரிமைத் திருத்தச் சட் டத்தை எதிர்த்து திருப்பூர் மாந கராட்சி அலுவலகம் எதிரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் க.செல்வராஜ் தலைமை ஏற்றார். இதில் முன் னாள் அமைச்சர் மு.பெ.சாமி நாதன் உள்பட திமுக நிர்வாகி கள் பங்கேற்றனர். மத்திய பார திய ஜனதா அரசு இஸ்லாமியர் களுக்கும், இலங்கைத் தமிழர் களுக்கும் எதிராக நிறைவேற்றி இருக்கும் குடியுரிமைத் திருத் தச் சட்டத்தை எதிர்த்து முழக் கம் எழுப்பினர். இதில் திரளான வர்கள் கலந்து கொண்டனர். தாராபுரம் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தாராபுரத்தில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் தனசேகர் தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்ம நாபன் குடியுரிமை சட்டத்தைக் கண் டித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை யினர், இலங்கை தமிழர்களை வஞ்சிக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை நாடாளுமன் றத்தில் நிறைவேற்றிய பாஜக அரசையும், அதற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அரசை யும் கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில் திமுக நிர் வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.