tamilnadu

img

இணையத்தில் அவதூறு பரப்பியதாக திமுக பிரமுகர் கைது

கோவை, மார்ச் 15-  தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து இணையத்தில் அவதூறு  பரப்பியதாக திமுக பொதுக் குழு உறுப்பினர் சனியன்று  இரவு கைது செய்யப்பட்ட தையடுத்து, காவல்நிலை யத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட் டத்தில் ஈடுபட்டதால் பரப ரப்பு ஏற்பட்டது. கோவை கிழக்கு மாவட்ட திமுக பொதுக் குழு உறுப்பினர் மு.ம.ச.முருகனை இராமநா தபுரம் காவல்துறையினர் சனியன்று  நள்ளிரவு அவரது வீட்டிலிருந்து காவல்நி லையத்திற்கு அழைத்து வந்தனர். இதனால்,  காவல்நிலையம் முன்பு ஏராளமான திமுகவி னர் கூடினர். இதனையடுத்து முகநூல், வாட்சப் மூலம் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது மு.ம.ச.முருகன் அவதூறு  பரப்புவதாக, அதிமுகவைச் சேர்ந்த கெளத மன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில்  அவர் கைது செய்யப்பட்டதாகத் காவல்து றையினர் தெரிவித்தனர்.  இந்நிலையில், மு.ம.ச.முருகனை நீதி பதி முன் ஆஜர்படுத்த காவல்துறை யினர் வாகனத்தில் ஏற்றியபோது நூற்றுக்க ணக்கான திமுகவினர் வாகனத்தை முற்றுகையிட்டு அதிமுக அரசிற்கு எதிராக வும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை  எழுப்பி னர். இதனால்  காவல் துறையினருக்கும், திமுகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவுப்படி மு.ம.ச.முருகன்  சிறையில் அடைக்கப்பட்டார்.  இதுகுறித்து கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் நா.கார்திக் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்,   கோவை மாநகராட்சியில் நிலவும் ஊழல், குண்டும், குழியுமான சாலை, சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோக உரிமையை வழங்கியது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் மற்றும்  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராகவும் கோவையில் திமுக சார்பில் தொடர்ந்து பல்வேறு கட்டப்  போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின் றது. இதை திசைத்திருப்பும் வகையில் மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் மு.ம.ச.முருகன் மீது தற்போது பொய் வழக்கு  போடப்பட்டுள்ளது. இந்த பொய் வழக்கு தொடர்பாக அமைச்சர் எஸ்பி.வேலுமணி மற்றும் அதிமுக அரசைக் கண்டித்து விரை வில் போராட்டம் நடத்தப்படும். சட்ட  ரீதியாக சந்தித்து இந்த அரசை தோலு ரித்துக் காட்டுவோம்.  மேலும், காவல்துறை உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் ஏவல் துறையாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;