tamilnadu

img

தருமபுரி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம்

தருமபுரி, ஏப். 24-தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 6 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்ட வகுப்பில் 21 வகையான பாடப்பிரிவுகள் உள்ளன. பொது விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் அசல் சாதிச் சான்று காண்பித்து நகல் வழங்கி இலவச விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பிளஸ்- 2 தேர்வு முடிவு கடந்த வாரம் வெளிவந்த நிலையில் மாணவ-மாணவிகள் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நீண்ட வரிசையில் நின்று இளநிலை பட்ட வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பத்தை வாங்கி சென்றனர்.மேலும், இக்கல்லூரியில் சேர மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் அருகாமையில் உள்ள சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பங்களை பெற வருகை புரிகின்றனர்.

;