கருப்பு கொடியேந்தி தொழிற்சங்கங்கள் ஆவேசம்
கோவை, மே 22 – பொது முடக்கத்தை அறிவித் துவிட்டு தொழிலாளர் நலச்சட்டங் களை சீர்குலைக்கும் மத்திய மோடி அரசை கண்டித்து வெள்ளியன்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. உலகெங்கிலும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக இந்திய நாடு முழுவதும் பொதுமு டக்கம் அறிவிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட் டுள்ளது. அதேநேரம், இந்த பொது முடக்கத்தை பயன்படுத்திக் கொண்டு பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, தொழிலாளர் நலச்சட்டங் களை பறிப்பது என மத்திய பாஜக அரசு தொழிலாளர் விரோத நடவடிக் கையில் ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து நாடு முழுவதும் 10 ஆயிரத் திற்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளியன்று கண்டன இயக்கங் களை நடத்த மத்திய தொழிற்சங்கங் கள் அறைகூவல் விடுத்தது.
இதன்ஒருபகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தலைமை தொலைபேசி நிலை யம் முன்பு மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐஎன்டியுசி வி.ஆர்.பாலசுந்தரம், ஏஐடியுசி எம்.ஆறுமுகம், எச்எம்எஸ் டி.எஸ்.ராஜமணி, சிஐடியு எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஆறுமு கம், எம்எல்எப் ப.மணி, ஏஐசிசிடியு கே.தாமஸ், எஸ்டிடியு என்.ரகுபுனிஸ் தார் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதே போல், போக்குவரத்து பணிமனைகள், பஞ்சாலைகள் என கோவை மாவட் டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உரிமை முழக்க போராட் டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் உள் ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், உடுமலை, பல்லடம், தாராபுரம், வெள்ளகோவில், காங்கேயம் மற்றும் அவிநாசி, ஊத்துக்குளி உள்பட அனைத்து நகர மற்றும் கிராமப்புறப் பகுதிகளிலும் கண்டன முழக்கப் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப் பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவ லகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் தலைமை ஏற்றார். இதேபோல் பல்வேறு பகுதிக ளில் நடைபெற்ற போராட்டங்களுக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண் ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சி.பழனிசாமி, மாவட்டச் செயலாளர் என்.சேகர், எல்பிஎப் செயலாளர் சிதம்பரசாமி, ஐஎன்டியுசி செயலாளர் அ.சிவசாமி, எச்எம்எஸ் செயலாளர் முத்துச்சாமி, எம்எல்எப் செயலாளர் பாண்டியராஜன் உள்பட சிஐடியு மாவட்ட நிர்வாகிகள், இணைக்கப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் எம்.ரவி, திமுக மாநகரச் செயலா ளர் டி.கே.டி மு.நாகராஜ் உள்ளிட் டோர் ஆதரவு தெரிவித்து போராட் டங்களில் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டம் முழுவதும் இப்போராட் டங்களில் மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் சிஐடியு மாநில துணைத்தலைவர்கள் ஆர்.சிங்கார வேலு, எஸ். கே. தியாகராஜன், மாவட்ட தலைவர் பி. பன்னீர்செல் வம், மாவட்ட செயலாளர் டி. உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், சேலம் போக்குவரத்து பணிமனைகள் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிருஷ் ணமூர்த்தி, வி. இளங்கோ, கருப்பண் ணன் உட்பட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகி கள் பங்கேற்றனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தி, சென்னிமலை உள்ளிட்ட நூற்றுக் கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றது. இதில் சிஐடியு தலைவர் சுப்பிரமணி, செயலாளர் ஸ்ரீராம், துணை தலைவர்கள் முருகை யன், ஆர்.ரகுராமன் உள்ளிட்ட நிர்வா கிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத் தாதே, ஊரடங்கு காலம் முழுமைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு சம்பளம் வழங்கு. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகளை செய்து கொடு, சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் தொழிலா ளர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடு என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில், குன்னூர், உதகை, பந்தலூர், பாலகொலா உள் ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றது. இதில் சிஐ டியூ மாவட்ட செயலாளர் ஆர் ரமேஷ், மாவட்ட துணை தலைவர் ஜெ ஆல் தொரை, சிஐடியு மாவட்ட பொருளா ளர் ஏ.நவீன் சந்திரன் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் ஏராளாமானோர் கலந்து கொண்ட னர்.