tamilnadu

img

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஜூலை 16 ல் மருத்துவ முகாம்

தருமபுரி, ஜூலை 11- ஒருங்கிணைந்த பள்ளிக்  கல்வித் திட்டம் சார்பில்,  மாற்றுத்திறனாளி குழந்தைகளுக் கான மருத்துவ முகாம் வருகிற ஜூலை 16 ஆம் தேதியன்று நடை பெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரி வித்தார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் வட்டார அளவில் நடத்துவது குறித்த கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட  ஆட்சி யர் எஸ்.மலர்விழி பேசுகையில், தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் சார்பில் வருகிற ஜூலை 16 ஆம் தேதி முதல் ஜூலை 25 ஆம் தேதி வரை 18 வயது வரையுள்ள அனைத்து வகையான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கும் வட்டார அளவில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாமில், கை மற்றும் கால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், காது கேட்காத மற்றும் வாய் பேச இயலாத குழந்தைகள், மன வளர்ச்சி குன்றியவர்கள், மூளை முடக்குவாதம், கண் பார்வை  குறைபாடு உள்ள குழந்தைக ளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. முகாமில், மாற்றுத்திறன் தன்மையின் அடிப்படையில் தேசிய அடையாள அட்டை மாற்றுத்திறனாளிகள் நல அலு வலகம் வாயிலாகவும், தேவை யான உதவி உபகரணங்கள்  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் வாயிலாகவும் விலையிற் லாமல் வழங்கப்பட உள்ளன. மேலும், அறுவை சிகிச் சைக்குத் தேர்வு செய்யும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு முதல் வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இலவச மாக அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்படும். ஜூலை 16 ஆம் தேதி யன்று தருமபுரி நகராட்சி மக ளிர் உயர்நிலைப் பள்ளி வளா கத்திலும், ஜூலை 17 ஆம் தேதியன்று மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, ஜூலை 18 ஆம் தேதியன்று பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஜூலை 19 ஆம் தேதியன்று பாலக்கோடு (உருது) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஜூலை 22 ஆம் தேதியன்று நல்லம்பள்ளி ஒன்றியம் அவ் வைநகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், ஜூலை 23 ஆம் தேதியன்று அரூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், ஜூலை 24 ஆம் தேதி யன்று காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மற்றும் ஜூலை 25 ஆம் தேதி யன்று பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்தார்.  முதன்மைக் கல்வி அலுவ லர் மு.ராமசாமி, மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் பாபு, மாவட்டக் கல்வி அலுவலர்கள் பாலசுப்ரமணி (தருமபுரி), ஆனந் தன் (அரூர்), சண்முகவேல் (பாலக் கோடு), ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித்திட்ட அலுவலர்கள் வெங்கடேசன், தங்கவேலு உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;