தருமபுரி, ஜூலை 25- பாரதி புத்தகாலயமும், தகடூர் புத்தக பேரவையும் இணைந்து 2-ம் ஆண்டு புத்தக திருவிழா ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆக.4 ஆம் தேதி வரை தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள மதுராபாய் சுந்தர ராஜராவ் திருமண மண்டபத்தில் நடை பெற உள்ளது. இந்த துவக்கவிழா நிகழ்ச்சிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலல் விழி தலைமை வகிக்கிறார். தமிழக உயல் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன் பழகன் புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்து, புத்தகத் திருவிழா மலரை வெளியிடுகிறார். வரவேற்புக்குழு செய லாளர் மருத்துவர் இரா.செந்தில் வர வேற்று பேசுகிறார். வரவேற்புக்குழு தலை வர் டி.என்.சி.மணிவண்ணன் அறிமுக உறையாற்றுகிறார். இதில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தருமபுரி தடங்கம் பெ.சுப்பிரமணி, பென்னாகரம் பி.என்.பி.இன்பசேகரன், பாப்பிரெட்டிப்பட்டி அ.கோவிந்தசாமி, அரூர் வி.சம்பத்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், சார் ஆட்சியர் சிவன் அருள், கல்லூரி கல்வித் துறை இணை இயக்குனர் சகுந்தலா, முதன்மைகல்வி அலுவலர் மு.இராமசாமி, மாவட்ட நூலகர் கோ.சேகர் ஆகியோர் பங்கேற்று பேச உள்ளனர். புத்தகத் திருவிழா நடைபெறும் 10 நாட்களும் பகல் 4 மணியில் இருந்து மாலை 6 மணி வரை நூல்வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளும், இலக்கிய கலந் தாய்வு கூட்டங்களும், கருத்தரங்குகள் நடைபெறும். மேலும், மாணவ, மாணவியர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.