tamilnadu

தருமபுரி மற்றும் சேலம் முக்கிய செய்திகள்

ஏரி, கால்வாய்களை தூா்வார வலியுறுத்தல்

தருமபுரி, டிச.15- கடத்தூா் வட்டாரத்திலுள்ள ஏரி, கால்வாய்களை தூா்வார வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி வட்டம், கடத்தூா் அருகேயுள்ள கல் லாற்றின் குறுக்கே பொதியம்பள்ளம் அணைக்கட்டு அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டிலிருந்து நல்லகுட்லஹள்ளி, போசிநாய்க்கனஹள்ளி, கடத்தூா் உள்பட 20-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும் வகையில் கால்வாய் வசதிகள் உள்ளன. பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் கடத் தூா் வட்டாரப் பகுதிகளில் தென்மேற்கு மற் றும் வடகிழக்கு பருவ மழையின் போது  பெருமளவு  மழை பெய்துள்ளது. இதனால், கடத்தூா் பகுதிகளில் ஓரளவுக்கு ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீா் நிலை களில் தண்ணீா் நிரம்பியுள்ளன. இந்நிலையில், பொதியம்பள்ளம் அணைக்கட்டில் இருந்து வெங்கடதார ஹள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, தாளநத்தம், பசுவாபுரம், சிந்தல்பாடி, கந்தகவுண்டனூா், குரும்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகு திகளில் உள்ள ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் முட்புதர்களால் அடைபட் டுள்ளது. மேலும், கால்வாய் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய் காளை சீரமைக்க பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலி யுறுத்தியுள்ளனர்.

சேலத்தில் இரு முக்கிய சாலைகள்  தலைக்கவச பகுதியாக அறிவிப்பு

சேலம், டிச.15- சேலத்தில் இரு முக்கிய சாலைகள் தலைக்கவச பகுதி களாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டுமென நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் வருவோருக்கு ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.  இந்நிலையில், ஒவ்வொரு மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் தலைக்கவச பகுதி என சாலையை தேர்வு செய்து, அச்சாலையில் தலைக்கவசம் இல்லாமல் வரு வோரை அனுமதிக்காமல், போக்குவரத்து போலீசார் அறி வுரை கூறி வருகின்றனர். இதன்படி, சேலம் மாநகரில் அன்னதானப்பட்டியில் மாவட்ட காவல் அலுவலகம் பகுதி யிலிருந்து, பிரபாத் பெரியார் வளைவு வரை உள்ள சாலை யும், சேலம் சுந்தர் லாட்ஜ் சாலை பகுதியும் தலைக்கவச பகுதி சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திங்க ளன்று காலை 7 மணி முதல் தலைக்கவசம் அணிந்துதான் இப்பகுதியை கடக்க வேண்டும்.  இதுகுறித்து மாநகர போலீஸ் துணை ஆணையர் செந் தில் கூறுகையில், தலைக்கவச பகுதியாக அறிவிக்கப்பட் டுள்ள பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தலைக்கவசம் இன்றி வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சிதிலமடைந்த பயணிகள் நிழற்கூடம்  சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரூர், டிச.15- அரூர் பெரியார் நகரில் சிதிலமடைந்த பயணிகள் நிழற் கூடத்தை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.  அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கோட்டாட்சி யர் அலுவலகம் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு  மாணவர்கள்,பொதுமக்களின் வசதிக்காக நிழற்கூடம் கட்டப்பட்டது. முக்கியமான பேருந்து நிறுத்தம் என்பதால்,  எப்போதும் இங்கு பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.  மேலும், பள்ளி மாணவர்கள் மழை பெய்யும் போது இந்த  நிழற்க்கூடத்தில் ஒதுங்குகின்றனர். இந்நிலையில் இந்த நிழற்கூடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள நிழற் கூடத்தை அகற்றி விட்டு, பெரிய நிழற்கூடத்தை அமைத்து தர மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

நூதன முறையில் கொள்ளை

சேலம், டிச.15- சேலத்தில் போலி ஆதார் அட்டை மற் றும் பான் கார்டு கொடுத்து மோசடி செய்த திண்டுக்கல்லை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் அழகாபுரத்தில் உள்ள தங்கும்  விடுதியில் சிலர் போலி ஆதார் அட்டை  மற்றும் பான் கார்டு வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் காவல்துறையினர் அங்கு நடத்திய சோதனையில் போலியான 32 ஆதார் அட்டை, 7 பான் கார்டு, 7 ஓட்டு நர் உரிமங்கள் மற்றும் கணினி ஆகிய வற்றை வைத்திருந்தது தெரியவந்தது.  அவற்றை பறிமுதல் செய்த காவல்துறை யினர், இதில் தொடர்புடைய திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த பட்ட தாரியான கண்ணன்(28), வேடசந்தூர் ராஜபெருமாள்(33), வடமதுரை அண் ணாநகர் அருண்(22), வடமதுரை செங் குளத்துப்பட்டி ராமு(23), தென்னம்பட்டி சரவணக்குமார்(22), சிறுநாயக்கன்பட்டி பன்னீர்செல்வம்(34), திருச்சி மணப்பாறை மதுபாலன்(23) ஆகிய 7 பேரிடம் விசா ரணை மேற்கொண்டனர்.   இதில்  கடனுக்கு டிவி மற்றும் வீட்டு உப யோகப் பொருட்களை போலியான முகவரி யுடன் ஆதார் அட்டைகளை கொடுத்து முன்பணமாக ரூ.2,500 மட்டும் செலுத்தி வாங்கிவிட்டு மீதி தொகையை செலுத்தா மல் ஏமாற்றி வந்தது தெரியவந்துள் ளது. இவ்வாறு சுமார் ரூ.30 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்தது தெரியவந்தது.  இதையடுத்து அவர்களை கைது செய்த  காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

;