கோவை, அக்.18– கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பிற் காக சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது. கோவை புலிய குளம் அருகே உள்ள பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தபாபு என்பவரின் மகள் தீபிகா (10). இவர் மருதூர் மாநகராட்சி துவக்க பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இச்சிறுமி கடந்த 10 நாட்களாக காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து சிகிச்சைக்காக கடந்த அக்.16 ஆம் தேதியன்று கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டார். இந்நிலையில் வெள்ளியன்று காலை சிகிச்சை பலனின்றி சிறுமி தீபிகா உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் காய்ச்சல் பாதிப்பினால் மாணவி உயிரிழந்ததையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் சிறுமியின் வீட்டருகே மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் உயிரிழந்ததாக சிறுமியின் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.