tamilnadu

ரத்தினபுரியில் டெங்கு: 7 வயது சிறுமி மரணம்

கோவை, நவ. 16- காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ரத்தினபுரியைச் சேர்ந்த 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரத்தினபுரி சுப்ரமணிய கவுண்டர் வீதியை சேர்ந்தவர் உதயகுமார்- தீபா தம்பதியினர். இவர்களது குழந்தை யோகா ஸ்ரீ (7). இவர் டாடாபாத் அரசு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந் தார். இக்குழந்தைக்கு கடந்த 13ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலை யில் வியாழனன்று அதிகாலை குழந்தை பேச்சு மூச்சின்றி கிடந்துள் ளது. தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென் றுள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக மருத்து வர்கள் தெரிவித்தனர். இது அப்பகுதி யில் பெரும் சோகத்தையும், அச்சத் தையும் ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், உயிரிழந்த குழந்தை யின் வீட்டின் அருகில் வசிக்கும் செல் வராஜ் என்பவரும் டெங்கு காய்ச்ச லால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று  வருகிறார். இதேபகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார். இப்பகுதியில் உள்ள சங்கனூர் ஓடை பல ஆண்டுகளாக சுத்தம் செய் யப்படாமல் இருப்பதால் டெங்கு கொசுக்கள்  அதிகம் உறத்தியாவதாக கூறும் இப்பகுதி மக்கள், கடந்த ஆண்டு 7 பேர் வரை இங்கு டெங்கு வால் உயிரிழந்தனர். எனவே, மாநக ராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உட னடியாக உரிய நடவடிக்கை எடுத்து  டெங்கு பாதிப்பிலிருந்து உயிரிழப்பு களைத் தடுக்க வேண்டும் என்று ரத்தின புரி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.