ஏற்காடு, டிச.19- ஏற்காடு ரோஜா தோட்டத்தில் உள்ள ஜப்பான் பீன்ஸ் மரங்கள் வெட்டி கடத்தப் பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தின் பிரதான சுற்றுலா தளங் களில் ஏற்காடு ஒன்றாகும். இங்கு விடு முறை தினம் மட்டுமின்றி அனைத்து நாட் களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள ரோஜா தோட்டம் ஏற்காட்டின் முக்கிய சுற்றுலா தலங்களின் பட்டியலில் உள்ளது. இங்கு பல்வகை ரோஜாக்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அங்கு ரோஜா செடிகள் மட்டுமின்றி சவுக்கு, நாகை, கொன்றை உள்ளிட்ட பல வகை மரங்கள் உள்ளன. அதில் ஜப்பான் பீன்ஸ் என்றழைக்கப்படும் பார்க்கியா ஜவானிக்கா மரமும் ஒன்று. இந்த மரத்தில் காய்க்கும் ஜப்பான் பீன்ஸ் காய்களை வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர் களும், நேபாளம் மற்றும் சீனாவை சேர்ந்த வர்களும் சாப்பிடுகின்றனர். மேலும் அதில் மருத்துவ குணம் இருப்பதாக கூறப்படு கிறது. இந்நிலையில் ரோஜா தோட்ட அதி காரிகள் கடந்த வாரம் 2 டன் அளவிலான ஜப்பான் பீன்ஸ் மரக்கிளைகள், காய்களை கள்ள சந்தையில் விற்பனை செய்தாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் புதனன்று மாலை 6 மணியளவில் ரோஜா தோட் டத்தில் உள்ள ஜப்பான் பீன்ஸ் மரக் கிளைகளை வெட்டி, அதிலிருந்த பீன்ஸ் காய்கள் பறித்து குவித்து வைக்கப்பட்டி ருந்தது. மேலும் ரோஜா தோட்ட அதி காரிகள் யாரும் இல்லாமல் இப்பணியினை தனிநபர் ஒருவர் செய்துள்ளார். இது குறித்து ரோஜா தோட்ட அலுவலர் ஜெயப்பிரகாஷ் கூறியதாவது, “ரோஜா தோட்டத்தில் நுழைவு பகுதியில் மேற் கூரை அமைப்பதாலும், அப்பகுதியில் உள்ள ரோஜா செடிகள் நன்கு வளர வேண்டியும், அங்குள்ள மரக்கிளைகள் வெட்டப்பட்டன. மரங்கள் மிகவும் உயர மாக உள்ளதால், ரோஜா தோட்ட பணி யாளர்கள் இல்லாமல் ஏற்காட்டை சேர்ந்த விவசாயி ஒருவரை கொண்டே இப்பணியை மேற்கொண்டுள்ளோம். மேலும் ஜப்பான் பீன்ஸ் காய்களை தனது மாடு சாப்பிடுவதற் காக கேட்டதால், பணம் ஏதும் பெறாமல் அந்த விவசாயிக்கே வழங்கினோம்.“ இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து உதவி தோட்டக்கலை அலுவலர் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது,“ இச்சம்பவம் குறித்து இப்போதுதான் தகவல் வந்துள்ளது. இது குறித்து விசாரணை மேற் கொள்ளப்படும் என தெரிவித்தார்.