tamilnadu

img

சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த கோரிக்கை

கோபி, ஆக. 31- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டே ரிப்பள்ளம் அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் கூட்டத்தைக் கட்டுப் படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அடர்ந்த வனப்பகுதியில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது.

இந்த அணைக்கு தண்ணீர் குடிக்க மாலை நேரங்களில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை, கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வருகின்றன. இந்நிலையில் இதை  பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிகளவு குவிந்து வருகின்றனர். பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் குண்டேரிப்பள்ளம் அணைக்கு  சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டி

ருந்தும் மாலை நேரங்களில் தனிமனித இடைவெளி யின்றி மக்கள் கூடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன்  வனவிலங்குகளும் பாதிக்கப் படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டு கின்றனர். மேலும், பொதுப்பணித்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து சுற்றுலாபயணிகளின் வருகைக்கு தடைவிதித்து அங்கு நடைபெறும் மீன் விற்பனையையும் முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள் ளனர்.

;