tamilnadu

img

சிபிஎம் நிதியளிப்பு பொதுக்கூட்டம்

கோவை, பிப். 8 –  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுக்கரை ஒன்றியக்குழுவின் சார்பில் நிதியளிப்பு பொதுக்கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன் பங்கேற்று சிறப்புரை யாற்றினார்.  கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றியக்குழுவிற்கு உட்பட்ட மலு மிச்சம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு பொதுக் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங் கேற்று சிறப்புரையாற்றினார்.  முன்னதாக, வளர்ச்சி நிதிக்காக கட்சியின் ஊழியர்கள் வீடுவீடாக சென்று நிதி சேகரித்த ரூ.2லட் சத்து 50 ஆயிரம் நிதியை மதுக்கரை ஒன்றியக்குழுவின் சார்பில் பி. ஆர்.நட ராஜன் எம்.பி,யிடம் வழங்கினர். இந்நிகழ்சியில் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர்  எஸ். கருப்பையா, தெற்கு நகர செயலா ளர்  நாகேந்திரன், விவசாய சங்க மாவட் டத் தலைவர் வி.பி.இளங்கோவன், செயலாளர், வி.ஆர். பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற் றினர். முன்னதாக இப்பொதுக்கூட்டத் தில் மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி கிளைகளின் சார்பில் 10 தீக்கதிர் சந்தா வழங்கப்பட்டது. இந்த நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.