22 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
கோபி, மார்ச் 20- கோபிசெட்டிபாளையத்தில் குடி நீர் திட்டப்பணிக்காக வந்திருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 24 தொழிலா ளர்களில், இருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மீதம் உள்ள 22 நபர்க ளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் நகராட்சியில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளுக்காக ஜார்கண்ட் மற்றும் மேற்குவங்க மாநி லங்களிலிருந்து வியாழனன்று இரவு 24 தொழிலாளர்கள் வந்தனர். இந்நி லையில், இவர்களின் வருகை அறிந்த மருத்துவத்துறை மற்றும் வருவாய்த்து றையினர் வெள்ளியன்று அந்த 24 பேரையும் தனிமைப்படுத்தி பரிசோ தனை செய்தனர். இதில், இருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந் ததை உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து, ஒருவரை பெருந்துறை மருத்துக்கல்லூரி மருத்து வமனைக்கும், மற்றொருவரை கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். உலகம் முழுவ தும் பேரிழப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் உயிரிழப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து கடுமையான தடுப்பு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோபிசெட்டிபாளைத் திற்கு வெளிமாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளர்களை வருவாய்து றையினர் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் கோபிசெட்டிபாளையம் பொதுமக்க ளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள் ளது.