அவிநாசி, ஜூலை 14- அவிநாசி அடுத்த பொன்ராமபுரம், பாரதிநகர் ஆகிய பகுதிகளில் சமீபத்தில் சாதி வெறியர்களால் படுகொலை செய் யப்பட்ட அசோக் நினைவேந்தலும், உறுதிமொழியேற்பு நிகழ்வு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஞாயி றன்று நடைபெற்றது. அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பென்ராமபுரம், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் சாதி வெறியர்களால் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். தோழர் அசோக் நினைவேந்தல் நிகழ் வில் சாதிவெறியை மாய்ப்போம், மனித நேயத்தை காப்போம் என உறுதிமொழி யேற்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் ஏற்றனர். இந்த நிகழ்வில் வாலிபர் சங்க அவிநாசி ஒன்றியச் செயலாளர் குமரன் விஜி, புதுப்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.