tamilnadu

மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

கோவை, பிப்.6- கோவை மாவட்டம், ஊராட்சி ஒன்றியம் மற்றும்  பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவல கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள் ளதாவது, கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், தொண்டாமுத்தூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை வியாழனன்று மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  கோவை மாவட்டத்தின் நகர்புற, கிராமப்புற மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளாட்சித் துறையின் மூலம் மழைநீர் வடிகால் அமைத்தல், சாலைவசதிகள், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், இன்று பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையத்தில் ரூ. 51.98 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்டு வரும்  மாவட்ட ஊராட்சி வள மைய கட்டிடப் பணியினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் புணரமைக் கும் பணியினை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், தீத்திப்பாளையம் ஊராட்சி, காளம்பா ளையத்தில் ரூ.2.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு  வரும் மேம்பாலப்  பணியினையும், தொண்டாமுத் தூர் பேரூராட்சியில், கெம்பனூர் குட்டை ரூ.50 லட்சம் மதிப்பில் புணரமைக்கும் பணியினையும், நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  இதனைத்தொடர்ந்து, தொண்டமுத்தூர் பேரூராட்சி காளியண்ணன்புதூரில் உள்ள அங்கன் வாடி மையத்தை பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகைப்பதிவேடு, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு வகைகள், ஆரோக்கியம் குறித்தும் மாவட்ட ஆட்சி யர் கு.இராசாமணி ஆய்வு மேற்கொண்டார்.

;