tamilnadu

img

துப்புரவுப் பணி தனியார்மயத்தால் அலங்கோலமான திருப்பூர்

திருப்பூர், ஜூலை 8 - திருப்பூர் மாநகராட்சியில் துப்புரவுப் பணியை தனியாருக்குத் தாரைவார்த்த பகுதிகளில் முறை யாக குப்பைகள் அள்ளப்படாமல், அதிக வருவாய் ஈட்டுவதற்காக பணியாளர்களைக் குறைத்து முறைகேடு செய்யும் நிலையில், இதைக் கண்டித்து சிஐடியு உள் ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. உள்ளாட்சிப் பணிகளில் தனியார்மயம் கூடாது. துப்புரவு, குடிநீர் மற்றும் உள்ளாட்சி ஓட்டு நர்களுக்கு அரசாணை எண் 62ன்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளாட்சிகளில் அரசு கூடு தல் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை  ஊழியர் சங்கத்தின் சார்பில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பி.பழனிச்சாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வையாபுரி, துணைச் செயலாளர் சங்கர்குமார், ராம மூர்த்தி மற்றும் மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதி களில் இருந்து பெருந்திரளான துப்புரவுப் பணியாளர்கள், குடி நீரேற்ற ஊழியர்கள், ஓட்டுநர்கள் திரளாக பங்கேற்று கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.