கோவை, ஜூன் 25- கருவூலத்துறையை தனியார் வசம் ஒப்ப டைக்கும் மாநில அரசின் முடிவைக் கண் டித்து கோவையில் செவ்வாயன்று தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கரு வூலம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருவூல துறையை தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது. காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். போதிய அடிப்படை வசதி கள் செய்து தர வேண்டும் ஆகிய கோரிக் கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து முழக்கங்களை எழுப் பினர். மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறுகையில், “கருவூல துறையை தனியாரிடம் ஒப்ப டைக்க தமிழக அரசு திட்டங்கள் நிறை வேற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுவரை என்.ஐ.சி. முறையாக பணிகளை செய்து வந்துள்ளது. அவர்களுக்கு போதிய வசதி செய்து கொடுத்து இருந்தால், இன் னும் சிறப்பாக செயல்பட்டு இருப்பார்கள். தனியாரிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் பல் வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. பணியாளர்களின் தகவல் களை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்றனர்.