tamilnadu

img

நீட் தேர்வை ரத்து செய்திடுக

சேலம், ஜூன் 9- தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வினால் பல மாணவிகள் உயிரிழந்து வருகின்றனர். மாணவ, மாணவியர்களின் உயிரிழப்பைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனக் கோரி சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் ரெஜிஸ் குமார் தலைமை வகித்தார். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில  தலைவர் ஏ.டி.கண்ணன், வாலிபர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் பி.கணேசன், மாவட்ட தலைவர் பி.கந்தசாமி, மாவட்ட பொருளாளர் வி.வெங்கடேஷ், மாநிலக் குழு உறுப்பினர் எம்.கற்பகம், மலைவாழ் இளைஞர் சங்க மாநில செயலாளர் என்.பிரவீன் குமார், மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கவின் ராஜ் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை  இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கமும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தும் என ஆர்ப் பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.