tamilnadu

img

விவசாய விளைப்பொருட்களை காக்கும் உயிர் வேலி

மேட்டுப்பளையம், ஜன.28 கோவை மாவட்டத்தில் உற் பத்தி செய்யப்படும் விவசாய விளைபொருட்களை வன உயிரி னங்களிடமிருந்து காக்க பழங்கால முறையான உயிர்வேலியை விவசாயி ஒருவர் அமைத்துள்ளார்.  கோவை மாவட்டத்தில் உற் பத்தி செய்யப்படும் விவசாய விளைப்பொருட்களில் சுமார் நாற் பது சதவிகிதம் வரை காட்டு யானை கள், காட்டுப்பன்றிகள், மான்கள் என வன உயிரினங்களால் அழிக்கப் பட்டு வருவதாக புள்ளி விபரங்கள்  தெரிவிக்கின்றன. இந்நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அடுத்துள்ள மலையடிவார கிராமமான அன்சூர் பகுதியில் ஒரு விவசாயி தனது தோட்டத்தை சுற்றி கள்ளிச்செடி மற்றும் சில தாவரங்கள் மூலம் உயிர் வேலி அமைத்துள்ளார்.  இதுகுறித்து விவசாயி தருமர் கூறுகையில், தோட்டத்தை சுற்றி ஊசி போன்ற கூர்மையான முட்களு டன் சுவர் போல் காட்சியளிக்கும் இந்த இயற்கையான வேலியை கடந்து யானை உள்ளிட்ட எந்த வொரு வன உயிரினமும் நுழைவ தில்லை. நம் பழந்தமிழர்கள் தங்க ளது விளைநிலங்களை சுற்றி உயிர் வேலிகளை அமைத்தே பல்லாண்டு களாய் விவசாயம் செய்து வந்துள்ள னர். கடந்த முப்பதாண்டுகளுக்கு முன்பு வரை கூட தமிழகத்தில் பல இடங்களில் உயிர் வேலிகள் இருந்துள்ளன.  ஆனால் அதன் பின்னர் ஏற்பட்ட விவசாய முறை மாற்றத்தால் உயி ரற்ற கம்பி வேலிகள் அமைத்ததன் விளைவாக பல்லுயிர் சூழல் அழிக் கப்பட்டு பல்வேறு பிரச்சனைகள் உருவாகிவிட்டது. இலைகளின்றி தன்னுள் நீரை சேமித்துக்கொண்டு முட்களுடன் காணப்படும் கள்ளி  வகை தாவரத்துடன் அமைக்கப்ப டும் உயிர்வேலியில் எப்போதும் சற்றே ஈரப்பதம் இருப்பதால் இதனை சுற்றி நொச்சி, ஆடா தொடை, ஆவாரை போன்ற பல் வேறு மூலிகை செடி வகைகள், பிரண்டை, கோவைக்காய் போன்ற  கொடிவகைகள் ஆகியவற்றோடு மட்டுமே குறிப்பிடப்படும் எண் ணற்ற புல் பூண்டுகள் பறவைகளின் எச்சங்களின் உதவியோடு ஒரு சில ஆண்டுகளில் வளர்ந்து புதர் போல் நிறைந்து விடும். எப்போதும் உயிர்ப்புடன் காணப்படும் இந்த உயிர் வேலிகளை கண்டால் பிரம் மாண்ட யானைகள் விலகி சென்று விடும். யானைகள் மட்டுமின்றி விவசாயத்திற்கு பெரும் சவாலாக உள்ள காட்டுப்பன்றிகள், மான்கள், மயில்கள் என எதுவும் இதனைக் கடக்க முயற்சிப்பதில்லை.  இதனால் நிலத்திற்கு சிறந்த  உரமாகவும் பயன்படும் இவ்வேலி கள், இதனுள் விளைவிக்கப்படும் பயிர்கள் இயற்கையான பல்லுயிர் சூழலோடு பாதுகாப்பாகவும், செழிப்பாகவும் வளர்கின்றன. இட்டேரி என்றும் அழைக்கப்படும் இந்த சூழல் காக்கும் உயிர் வேலி கள் கிராமம் தோறும் காணப்பட்ட நிலையில், தற்போது இதன் தேவை  மிக மிக அவசியமாகி வருகிறது. உணவு தேடி காட்டை விட்டு வெளி யேறும் வன விலங்குகளால் ஏற்ப டும் பயிர் மற்றும் உயிர் சேதங்களை தடுக்க சூழலை பாதிக்கும் கம்பி வேலிகளை தவிர்த்து உயிர் வேலி களை உருவாக்குவது முக்கியமாகி றது. இதற்கு பாரம்பரிய வழக்கத்தில் இருந்த இந்த உயிர் வேலிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு இவற்றை அமைக்க விவசாயிகளை ஊக்குவிப் பதும் அவசியமாகிறது.  ஆகவே கோவை மாவட்ட வன  அலுவலர், இதுகுறித்து அரசின்  கவனத்திற்கு கொண்டு சென்றுள் ளதாகவும் தெரிவித்தார். ஆண்டுதோ றும் கோடிக்கணக்கில் செலவழித் தும் இதுவரை பயன்தராத அகழி வெட்டுதல், கம்பி கட்டுதல் போன்ற வற்றை தவிர்த்து பாரம்பரிய உயிர் வேலிகள் அமைப்பது குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

;