tamilnadu

img

வடமாநிலத் தொழிலாளியைத் தாக்கி வழிப்பறி

திருப்பூர், ஜூன் 12 - திருப்பூர் அருகே முதலிபாளையம் சிட்கோ தொழிற்பேட்டையில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளி ஒருவரை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சமூக விரோதி கள் வழிப்பறி செய்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காய மடைந்த தொழிலாளி தனியார் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். இதுபோல் தொழிலாளர்களிடம் சமூக விரோதிகள் மதவெறி அமைப் புகளின் பெயரில் அடிக்கடி மிரட்டி வழிப்பறி செய்வதும், மறுத்தால் அடித்து தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாக உள்ளது. எனவே  இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய வலி யுறுத்தி சிட்கோ தொழிற்பேட்டை யில் வேலை செய்யும் நூற்றுக்கணக் கான தொழிலாளர்கள் சிட்கோ நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறை யினர் சம்பவ இடத்துக்கு வந்து தொழி லாளர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.  எனினும் விஷ்வ ஹிந்து பரிஷத்  அமைப்பைச்  சேர்ந்த சமூக விரோதி களை காவல் துறையினர் கைது செய்ய  வேண்டும். தொடரும் வழிப்பறி மற் றும் தாக்குதல் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.