tamilnadu

img

நிவாரண உதவி கேட்டு வேடமணிந்து நடனக் கலைஞர்கள் மனு

கோவை, மே 28 -  நிவாரண நிதியுதவி கோரி எம்ஜி ஆர், கமல்ஹாசன், சந்திரபாபு ஆகி யோர் வேடமணிந்து வந்து நடன கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கொரோனா ஊரடங்கினால் பல் வேறு தரப்பினரும் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், கோவையில் ஊரடங்கினால் தவித்து வரும் நடனக் கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு நிவாரண நிதி யுதவி கேட்டு வந்திருந்தனர். முன்ன தாக எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், சந்திர பாபு ஆகியோர் வேடமணிந்து வந்த அவர்கள் கூறுகையில், மேடை நடனத்  தொழிலை நம்பியுள்ள கலைஞர் களுக்கு பிப்ரவரி முதல் ஜீன் மாதம் வரையிலான சீசன் வருமானமே வாழ் வாதாரமாக இருந்து வந்தது. இந்நிலை யில், கொரோனா ஊரடங்கினால் வாழ் வாதாரம் முடங்கியுள்ளது. நலவாரியத் தில் நாங்கள் இல்லையென்றாலும் மக்களை மகிழ்வித்த நாங்கள் தற் போது துயரத்தில் இருக்கிறோம். ஆகவே தமிழக அரசு  நிவாரண உதவி வழங்க வேண்டும். மேலும் இந்த காலத்தில் அரசு சார்பில் நடை பெறும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி களில் வாய்ப்பளிக்க வேண்டும், இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள் ளது.

;