tamilnadu

img

தன் மனைவிக்கு வாக்களிக்காததால் அருந்ததியர் மக்கள் மீது தாக்குதல்

ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரை கைது செய்யக்கோரி சாலை மறியல்

பொள்ளாச்சி, ஜன. 18- பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு அருகே உள் ளாட்சி தேர்தலில் தனது மனைவிக்கு வாக்களிக்காததால் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதி யைச் சேர்ந்த நபர் அருந்ததிய மக்களை தாக்கிய சம்பவத்தை கண்டித்து அருந்ததியின மக்கள் சாலை மறியிலில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், பொள் ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள கோவிந்தாபுரம் பழைய காலனி பகுதியில் வியாழ னன்று அருந்ததியர் சமூக மக்கள்  ஒன்று கூடி  பொங்கல்  விழாவை கொண்டாடியுள்ளனர். இதை யொட்டி கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றுள்ளன. அப்போது சம்பவ  இடத்திற்கு வந்த ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் அங்கிருந்த தமிழரசி (42)  என்ற பெண்ணை தகாத வார்த்தை யால் பேசியும், அருந்ததியர் சமூக மக்களை சாதியின் பெயரால் அவதூறாகவும் பேசியுள்ளார்.  குறிப்பாக, அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனது மனைவி எஸ்.ஆனந்திக்கு, அருந்ததியர் சமூக மக்கள் வாக்களிக்காததால்தான் தோல்வியுற்றதாக கடும் ஆத்தி ரத்துடன் கூறியதுடன், உங் களுக்கு ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் தேவையா என தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலரையும் மரக்கட்டைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், சண்முகத்துடன் உடன் வந்த பிரபு என்பவர் மேடைகளை உடைத்தும், மின் இணைப்பை துண்டித்தும், அருந்ததியர் மக் களை தாக்கியதாகவும் கூறப் படுகிறது. 

இதுகுறித்து சனியன்று கிணத்துக்கடவு காவல் நிலை யத்தில் இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தாக்கு தலில் ஈடுபட்ட சண்முகத்தின் மீதும், அவருடன் வந்து தகராறில் ஈடுபட்ட பிரபு  உள்ளிட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட் டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்கக் கோரி சனியன்று கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் முரளி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அருந்ததியர் சமூக மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்ததைத் தொடர்ந்து அனை வரும்  கலைந்து சென்றனர்.

;